Mon. Aug 25th, 2025

மூக்குப்பீறியில் அ.தி.மு.க. திண்ணைப் பிரச்சாரம்

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி ஊராட்சி பகுதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்ணைப் பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனையின் பேரில், அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கி திண்ணை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியில் உள்ள மக்கள் விரோத திட்டங்கள் குறித்தும் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை அ.தி.மு.க. வினர் மக்களிடம் வழங்கி திண்ணைப் பிரச்சாரம் செய்தனர்.

இத் திண்ணை பிரச்சாரத்தில் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செம்பூர் ராஜ் நாராயணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர ஜூலியட் ரவிசங்கர்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஞானையா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கந்தன், நாசரேத் நகர அ.தி.மு.க. செயலாளர் கிங்ஸ்லி,
தென்திருப்பேரை நகர கழக செயலாளர் ஆறுமுகநயினார், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலமுருகன், நகர துணை செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி மாயாண்டி, வட்டச் செயலாளர் செல்வகுமார், நாசரேத் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலா, தென்திருப்பேரை பிரேம் ஆனந்த், மூக்குப்பேரி ஊராட்சி வார்டு செயலாளர்கள் காமராஜ், மேஷாக் பொன்சேகர், பாலசுந்தர், பாக்யராஜ் மற்றும் ஞானமுத்து, சந்தனமாரி, பொன் செல்வி, ஜெப செல்வி, ராஜநாயகம், ஜெபமணி,நீலம் நாராயணன், மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post