திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் இட்டேரி அமைந்துள்ளது.
இச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், இன்று மாலை எதிரி எதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்தில் சிவந்திப்பட்டியை சேர்ந்த தொழிலாளி பலியானார்.

இவ்விபத்தில் காயம் அடைந்த மற்ற நபர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்