நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அறிவியல் மன்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உடற்கல்லி ஆசிரியர் தனபால் இறைவேண்டல் செய்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை உரை ஆற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையோடு வளர வேண்டும், அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும், வருங்காலங்களில் விஞ்ஞானிகளாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, மாணவர்களுக்கு அறிவியல் வண்ணக் கோலப்போட்டிகள் நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தங்களது அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள செயல்பாடுகளை ஓவியங்களாக வரைந்து, வண்ணக் கோலமிட்டு காட்சிப்படுத்தினர்.
மனித இதயம், தாவர செல் அமைப்பு, இயற்பியல் நுண்ணோக்கி, பாக்டீரியா, மைட்டோகாண்ட்ரியா ஆகியவற்றின் அமைப்பு போன்றவற்றை சிறப்பாக வண்ணக் கோலங்களால் வடிவமைத்து காட்சிப் படுத்தினர். தாவரவியல் ஆசிரியை பேபி ஜாக்குலின், கணித ஆசிரியைகள் அமுதா வில்சி மற்றும் ஸ்வீட்லின் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
பின்னர், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 6 மற்றும் 7ம் வகுப்பு பிரிவில் மாணவர்கள் தனசேகரன், திருமுருகன் முதலிடத்தையும், மாரிமுத்து, சுமன் இரண்டாம் இடத்தையும், கார்த்திகேயன் தனுஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
8 மற்றும் 9ம் வகுப்பு பிரிவில் மாணவர்கள் மதன், பிரதீப் முதலிடத்தையும், கார்த்திகேயன், ஜெஸ்டன் இரண்டாம் இடத்தையும், கபி ரோஷன், முத்துராஜா, கோபு, மிராக்கிள் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
அறிவியல் ஆசிரியர் ஐசக் சந்தோஷ் பிரபு நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ், அறிவியல் ஆசிரியைகள் ஜெயந்தி சுபாஷினி, சோபியா பொன்ஸ் மற்றும் ஓவிய ஆசிரியர் அலெக்ஷன் கிரிஸ்டோபர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655