தூத்துக்குடி:மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால்-வாய் நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் வரும் 31ம்தேதி வரை நடக்கிறது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்படி, கால்நடைகளுக்கு 7வது சுற்று கால் &வாய் நோய் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா சிறப்பு முகாம் வர்த்தகரெட்டிப்பட்டியில் நேற்று நடந்தது.
முகாமிற்கு தூத்துக்குடி மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர். சஞ்சீவிராஜ் தலைமை வகித்தார். கால்நடை தீவன அபிவிருத்தி துணை இயக்குநர் டாக்டர். ஆபிரஹாம் ஜாப்ரி ஞானராஜ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர். பழனி, உதவி இயக்குநர் வேல்மாணிக்கவள்ளி முன்னிலை வகித்தனர்.
முகாமில், ஏராளமான கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து, மண்டல இணை இயக்குநர் டாக்டர். சஞ்சீவிராஜ் கூறியதாவது, மாவட்டத்தில் 31ம் தேதிக்குள் 1,40,000 கால்நடைகளுக்கு இலவசமாக கால் – வாய் நோய் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என்றார்.
இதில், உதவி மருத்துவர்கள் சரண், விக்னேஷ்வரன், ஆய்வாளர்கள், பணியாளர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.