Mon. Aug 25th, 2025

புன்னகை தேசம் கோரிக்கையினால் பேய்க்குளம் – சாலைப்புதூர் சாலை விரிவாக்க பணி சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பேய்க்குளம் – சாலைப்புதூர் சாலையானது குறுகிய சாலையாக இருந்து வருகிறது.

மேற்படி சாலையில், சாலைப்புதூர் மற்றும் ஆசீர்வாதபுரத்தில் இரு மேல்நிலைப் பள்ளிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், கூட்டுறவு வங்கி, பெட்ரோல் பங்க் மற்றும் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

சாலைப்புதூர் மற்றும் ஆசிர்வாபுரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்தித் தான் நடந்தும் சைக்கிளிலும் வருகின்றனர்.

மேலும் திருநெல்வேலி செல்வதற்கு பெரும்பாலும் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் மீரான்குளத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு வரும் டாரஸ் லாரிகள் இச்சாலையில் அதிக அளவில் செல்லுகின்றன.

இதனால் இந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவ மாணவிகளிலும் பொதுமக்களும், சைக்கிளிலும் நடந்து செல்வதற்கும் அச்சத்துடன் சென்று வந்தனர்

எனவே புன்னகை தேசம் சார்பில் சாலைப்புதூர் – மீரான்குளம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் எனவும், சாலையோரமாக மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது

புன்னகை தேசத்தின் கோரிக்கை தொடர்ந்து, பேய்க்குளம்  சாலைப்புதூர் சாலையை விரிவாக்கம் செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறையினர் செய்தனர்.

தற்போது பேய்க்குளம் சாலைப்புதூர் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியினை விரைவுப்படுத்தும்  வகையில், சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சின்னச்சாமி, உதவி பொறியாளர் சிவசண்முகநாதன் ஆகியோர் நேரில் சென்று சாலையையும், பாலங்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது மேற்படி சாலையில் உள்ள பாலங்கள் விரிவுபடுத்தப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் விரைவில் நடைபெறும் என தெரிவித்தனர்.

மேலும் சாலைப்புதூரில் இருந்து  மணிமுத்தாறு கால்வாய் வரை மழை நீர் வடிகால் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்

அப்போது சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் ஆய்வாளர் முருகன் மற்றும் சாலைப் பணியாளர்கள் ராஜதுரை, ஞானசேகர் ஆகியோர் இருந்தனர்

மா. காளியப்பன்
புன்னகை தேசம் நிருபர்
பேய்க்குளம்

Related Post