Mon. Aug 25th, 2025

உலக சுற்றுச் சூழல் தினம் விழா

உடன்குடி அருகே அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளியில் உலக சுற்று சூழல் தினவிழா அனுசரிக்கப்பட்டது.

இதில் தலைமை ஆசிரியர் கோகிலா தங்கம் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை ஜெயக்குமாரி உறுதிமொழி கூறினார்.

மாணவர்கள் நீர்,நிலம், காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு பற்றி ஓவியம் வரைந்தனர்.பாடல்கள் பாடினர். அதைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் பெற்றோர் ஆசிரியர் தலைவர் கெத்சியாள். கிராம மக்கள் ஜெயசீலி, ரெஜினா,கவிதாமாலினிறி.பி.சி.பணியாளர்கள் எலிசபெத், ரோஸ்மேரி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post