ஸ்ரீவைகுண்டத்தில் நாளை (03.07.2025) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி சப் கலெக்டர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் & தூத்துக்குடி வட்ட விவசாயிகளுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபீசில் நாளை (03.07.2025) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
இதில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி வட்ட விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்