Tue. Aug 26th, 2025

ஆறுமுகநேரியில் உலக யோகா தினம்

உலக யோகா தினத்தில்
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில்
முதியோர்களுக்கு சிறப்பு யோகா மற்றும் மூச்சு பயிற்சி முகாம் உலக யோகா தினத்தை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் சிறப்பு யோகா மற்றும் மூச்சு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சகம் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஆறுமுகநேரி அருகே சீனந்தோப்பு கிராமத்தில் உள்ள லைட் முதியோ இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு ஒரு வருடமாக வாரத்தில் திங்கள், புதன், மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் இலவச யோகா மற்றும் மூச்சு பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா மற்றும் மூச்சு பயிற்சி முகம் நடைபெற்றது. சிறப்பு யோகா மற்றும் மூச்சு பயிற்சி முகாமிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட சுகாதாரப் பேரவை உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கி யோகாவின் பயன்கள் மற்றும் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறினார்.

மதர் சமூக சேவை நிறுவன துணைத் தலைவரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத்தலைருமான ஏ.பொ. சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக லைட் சோசியல் வெல்பர் டிரஸ்ட் இயக்குனர் பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார். மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளரும், யோகா பயிற்றுனருமான எஸ் பானுமதி மற்றும் உதவி பயிற்றுனர் ஜூலியட் அசோக் ஆகியோர் யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளித்தனர்.

அதனை தொடர்ந்து யோகாவின் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். இதில் பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம்,சோமாசனம், உட்ரா பத்மாசனம், யோக முத்ரா, வஜ்ராசனம், சப்த வஜ்ராசனம் , பச்சி மோட்டாசனம், ஜனுகிராசனம், கோமுகாசனம், அர்த்தமத்சியேந்திராசனம், பர்வத்தாசனம், சவாசனம் , மச்சியாசனம், சக்ராசனம், வச்ராசனம் போன்ற யோகா பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முடிவில் லைட் சோசியல் டிரஸ்ட் அறங்காவலர் தியராஜன்நன்றி கூறினார்.

பயிற்சியில் கலந்து கொண்ட முதியவர்கள் யோகா பயிற்சி தியான பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியத்துடனும், மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதாகவும், பயிற்சி மூலம் நல்லொழுக்கத்தையும் கற்று இருப்பதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post