Tue. Aug 26th, 2025

இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

பட்டினம்பாக்கம் , சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முள்ளிக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் சிபிஎம் இந்தியா அறக்கட்டளை நிர்வாகிகள் சதீஷ் மற்றும் ரவி ராகவன் ஆகியோர் வழிக்காட்டுதலின் பேரில், ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்-ஆசியா திருப்பத்தூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கே. உஷாகுமாரி அவர்கள்
தலைமையிலும், முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் மீனவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சேகர், செயலாளர் விஜயன் மற்றும் முள்ளிக்குப்பம் ஊர் பொதுமக்கள் முன்னிலையிலும் சிறப்புற நடைப்பெற்றது.

மேலும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த சிறப்பு முகாமில் சென்னை பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் மீனவ சமூதாய மக்கள் 500க்கும்
மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

மேலும் இம்முகாமில் அவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சுகாதார ஆலோசனைகள் மற்றும் கண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து ம் ஏ.சி.எஸ் மருத்துவமனை மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த முகாம் ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்-ஆசியா, ஃபேஸ் அறக்கட்டளை மற்றும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியாகும்

மேலும் ஐ.சி.டபிள்.யூ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்கள் இந்த முகாமிற்கு உற்ற துணையாக இருந்த ரவி ராகவன் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் வி. கமலக்கண்ணன் மற்றும் சமூக ஆர்வலர் கே.கே.ஜே சாலமோன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.

மேலும் இந்த முகாமில்
கண் சம்மந்தப்பட்ட பரிசோதனை,
ஒற்றைத் தலைவலி ஆலோசனை,
இலவச இரத்த சர்க்கரை பரிசோதனை, தோல் மருத்துவம் மற்றும் எலும்பியல் ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இம்மருத்துவ முகாம் ஏற்பாடுகளை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவன நிர்வாகிகள், முள்ளிக்குப்பம் மீனவ பஞ்சாயத்து சபை நிர்வாகிகள் , மீனவர்கள் நலச்சங்க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், தன்னார்வல மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Related Post

One thought on “இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்”
  1. இந்த மருத்துவ முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏ. ஜே. ஹரிஹரன் அவர்களின் சிறப்புரை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகள் மிகுந்த மதிப்புடையவை. பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சி இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கியது. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த முகாம் எதிர்காலத்தில் மீண்டும் நடத்தப்படுமா? German news in Russian (новости Германии)— quirky, bold, and hypnotically captivating. Like a telegram from a parallel Europe. Care to take a peek?

Comments are closed.