திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் கலைஞர் நகரில் என் நேசரின் ஊழியம் சார்பில் நற்செய்தி கூட்டம் கலைஞர் நகர் மைதானத்தில் பாஸ்டர் சாமுவேல் தலைமையில் என் நேசரின் ஊழிய வாலிபர்கள் விசுவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக உயிரே உயிரே ஊழியம் சென்னை கிரேஸ் மேரி கலந்து கொண்டு வேதத்திலிருந்து தேவ வார்த்தையான என்னால் செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ என்ற தலைப்பில் இரட்சிக்கப்பட்ட அனுபவம், சாட்சி, தேவனின் மகத்துவங்கள், இயற்றிய பாடல்கள், குறித்து சபை விசுவாசிகள் மற்றும் பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். கலந்து கொண்ட அனைவரும் தேவ வார்த்தையால் பரவசமடைந்தனர்

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் ராஜேஷ் கண்ணா தன்னுடைய இரட்சிப்பின் அனுபவ சாட்சி இயேசு யார், என்பதைக் குறித்து தெரிவித்தார்
இறுதியில் என் நேசரின் ஊழியம் சபை போதகர் சாமுவேல் அனல் மிக்க ஆராதனையில் சபை விசுவாசிகள் ஆவிக்குரிய பாடல்கள் பாடினர்
முடிவில் கும்மிடிப்பூண்டி பாஸ்டர் ஆசிர்வாதம் கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது
கூட்டத்தில் விசுவாசிகள் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்
ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்
Super wonderful message