தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சார்பில், ஜமாபந்தி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது
வருவாய் தீர்வாய அலுவலர் பொன்னேரி மற்றும் திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் கணேஷ் ஜமாபந்தியை துவக்கி வைத்தார்
சோழவரம் ஆரணி குறுவட்டத்திற்குட்பட்ட விச்சுர் பெரவள்ளூர் வைரங்குப்பம் வடக்க நல்லூர் துறை நல்லூர் சவுண்டபுரம் பூந்தவாக்கம் மாதவரம் மல்லியன் குப்பம் ஆரணி உள்ளிட்ட பொதுமக்கள் பட்டா மற்றும் இதர குறைகளுக்கான மனுக்கள் அளித்தனர்
இதில் விச்சுர் ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சியில் அடங்கிய செம்பிய மணலி ஏரியில் அரசுக்கு சொந்தமான 10 க்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்து வருவதாகவும் அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தவும் விச்சுர் ஊராட்சி பொதுமக்கள் ஜமாபந்தி அதிகாரியிடம் மனு அளித்தனர்
பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம்,வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார்,துணை வட்டாட்சியர் பாரதி வருவாய் ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்
ஜே. மில்ட்டன்,
திருவள்ளுர்