பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது, இதனால் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்கள் சேதமடைந்தன,
இந்த நிலையில் தென்னக ரயில்வே நிர்வாகம் சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதால் கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை சென்ட்ரல் வரை இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் காலை 10 மணி வரையிலும் மாலை 4:30 மணிக்கு மேல் மட்டுமே இயக்கப்படுகிறது, இடைப்பட்ட நேரங்களில் பொன்னேரி ரயில் நிலையம் வரை மட்டுமே புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது

இதனால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பு பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்,
கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் பயணிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து தச்சூர் பொன்னேரி வரை பேருந்தில் வந்து பின்னர் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்தனர்
இதனால் வேலைக்கு கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்
எனவே ரயில் பயணிகள் தண்டவாள பணியினை விரைவில் சீரமைத்து அனைத்து ரயில் போக்குவரத்துகளையும் உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
ஜே. மில்ட்டன்,
திருவள்ளுர்