Tue. Jul 1st, 2025

ஆரணி ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டும் பொன்னேரி நகராட்சி மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் பிரதாப்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நெகிழி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்றும் கடற்கரை தூய்மை ப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பரப்புரை பேரணி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தன் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்,

பின்னர் அங்குள்ள கடற்கரைக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் தன் ஆர்வலர்களுடன் சேர்ந்து நெகிழி கழிவுகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்,

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர் பிரதாப் கடற்கரை சுற்றுச்சூழல் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என்றும் தற்போது மட்டுமின்றி வாரம் தோறும் நெகிழி கழிவுகளை அகற்றும் பணியை இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என தெரிவித்தார், அப்போது பொன்னேரி நகராட்சி நிர்வாகம் ஆரணி ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டி மாசுபடுத்துவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஆட்சியர் பிரதாப் ஆரணி ஆற்றில் குப்பை கொட்டும் பொன்னேரி நகராட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதில் பொன்னேரி சாராட்சியர் ரவிக்குமார் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் வனவிலங்கு காப்பாளர் மனிஷ் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்

ஜே. மில்ட்டன்,
திருவள்ளுர்

Related Post