இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக இ காணிக்கை அறிமுக விழா நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நாசரேத் கிளை மேலாளர் அமல் வரவேற்புரை வழங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மும்பை மெதடிஸ்ட் சபை போதகர் காட்சன் சாமுவேல் இ காணிக்கை பலகையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விற்பனை மேலாளர் அழகுவேல், அகப்பை குளம் பாஸ்டேட் சேர்மன் பாஸ்கரன். திருமறையூர் திருச்சபையின் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ் சேகர செயலாளர் ஆசீர் துரைராஜ் ஜெயசிங், ஜீவன், பாக்யராஜ் ஆலய பணியாளர் ஆபிரகாம், ஜோயல் நாசரேத் பிலிப் ஜெயசிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் நன்றி உரை வழங்கினார்.
த. ஞான்ராஜ்கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர் 9487445655