மீரான்குளத்தில் ஆம்னி வேனில் வந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியிலும், மறுநாள் 35 சவரன் நகைகளை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்

சம்பவம் குறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் உடனடியாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி அலுவலர்கள் நட்டார் ஆனந்தி, ராஜூ தலைமையிலான சுமார் 50 பேருக்கும் மேல் வந்த தீயணைப்பு மீட்பு சிறப்புக்குழுவினர் மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

குழந்தையின் சடலத்தையும் மீட்பதற்கும், நகைகள் அடங்கிய பையினை மீட்கவும் சாத்தான்குளம் தீயணைப்பு படையை சேர்ந்த வீரர் சதிஷ்குமார் கிணற்றுக்குள் இறங்கி தனது பணியினை திறம்பட செய்தார்.

மீட்பு பணியில் சாத்தான்குளம், திசையன்விளை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு படை வீரர்களும் வருகை தந்து தங்களது வேலைகளை சிறப்பாக மேற்கொண்டனர்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தங்களது உயிரை துச்சமாக மதித்து கிணற்றுக்குள் இறங்கி சடலங்களை வெளியே எடுத்தும், நகைகளை மீட்டும் கொடுத்த வேலை செய்த அனைத்து தீயணைப்பு படை வீரர்களுக்கும் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்

வீடியோ