மெஞ்ஞானபுரம், மே.20-ரோட்டில் சென்று கொண்டிருந்த பைக் மீது எதிரே வந்த டிரக்கர் மோதியதில் தாய் தகப்பன் படு காயங்களுடனும் மகன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
உடன்குடி அருகே உள்ள கந்தபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் கண்ணன் (35) இவர் நாசரேத்தில் இருந்து கந்தபுரம் நோக்கி பைக்கில் தனது மனைவி லிங்கேஸ்வரி மற்றும் மகன் கிருஷ்ணருடன் வந்துள்ளார்.
மெஞ்ஞானபுரம் பஜாரில் வரும்போது எதிரில் வந்த டிரக்கர் கண்ணன் ஓட்டி வந்த பைக்கின் மீது மோதியுள்ளது இதனால் பைக்கில் வந்த கண்ணன் குடும்பத்தினர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் மூவரும் படுகாயம் அடைந்துள்ளனர்
அவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் கண்ணனின் மகன் கிருஷ்ணன். சுமார்(3) வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் அவரது மனைவி லிங்கேஸ்வரி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, கண்ணன் குடும்பத்தினர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய டிரக்கரை பறிமுதல் செய்து அதை ஒட்டி வந்த, செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்த கணேஷ் பாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.