மீரான்குளம் கிணற்றில் ஆம்னி வேன் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பேரை மேல மீரான்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் பாண்டி (65) என்பவரும், மீரான்குளத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவரின் மகன் லூக்கா ஞானசேகர் (45) ஆகிய இருவரும் சேர்ந்து காப்பாற்றினர்

இதுகுறித்து அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் சம்பந்தப்பட்ட பாண்டி, லூக்கா ஞானசேகர் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்தும் பரிசு கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்
இருவரையும் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர்களும் இணைந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்