Tue. Jul 1st, 2025

மீரான்குளம் கிணற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து மூன்று பேரை காப்பாற்றிய கதாநாயகன்

நேற்று மாலையில் மீரான்குளம் ஊருக்கு மேல் புறமுள்ள கிணற்றில் மாருதி வேன் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேரை மேல மீரான்குளத்தை சேர்ந்த மாடசாமி தேவர் மகன் பாண்டி தேவர் (65) என்பவர் சத்தம் கேட்டவுடன் கிணற்றில் குதித்து மூன்று பேரை காப்பாற்றி உள்ளார்

பாண்டித்தேவர் அவர்களை இன்று காலை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள்  அழைத்து காப்பாற்றி வித்தை குறித்து கேட்டு விசாரித்துவிட்டு, அவரது துணிச்சலான செயலுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

அப்போது சாத்தான்குளம்  வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்

முன்னதாக மேற்படி இடத்தினை திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வின் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்

Related Post