தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் சுமார் சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது
உள்ளூரில் இருந்து மோட்டார் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்து நீரை அகற்றப்பட்டது
அதன் பிறகு கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் கிணற்றுக்குள் கிடந்த இரு பைகளை மீட்டு மேலே அனுப்பினார்

அதன்படி கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்து சுமார் 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டது

சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா சாத்தான்குளம் காவல்துறை சார்பாக உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செல்வராஜ், காவலர் ஆனந்தகுமார் மற்றும் பலர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்

உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு நகைகளை மீட்ட தீனைப்பு படை வீரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வருவாய் துறையினற்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்