Tue. Aug 26th, 2025

மீரான்குளம் கிணற்றில் பாய்ந்த வேனியில் இருந்து மூன்று பேர் மீட்கப்பட்டு ஐந்து பேர் என்னவானார்கள் என்று தெரியாது நிலையில், வேனில் வந்தவர்களின்  விவரம் தெரிய வந்தது

கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் வட்டம் வெள்ளாளன் விளை தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டைக்காக இன்று (17.5.2025) மாலை 5.00 மணியளவில் மீரான்குளம் – சிந்தாமணி சாலையில் திரு.மோசஸ் என்பவர் ஓட்டி வந்த கார் நிலை தடுமாறி 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது.

கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் காட்சிகள்

மேற்படி காரில் 8 நபர்கள் இருந்துள்ளனர் அதில் ஷைனி கிருபாகரன் (வயது – 25) ஜெனிட்டா எஸ்தர், மற்றும் ஹெர்சோம் மோசஸ் (வயது – 30) ஆகியோரை ஊர் பொது மக்கள் மீட்டுள்ளனர்.

மேற்படி மூன்று நபர்களுக்கும் காயம் ஏதுமில்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இவர்களுடன் வந்த 1. மோசஸ் (வயது 50), த.பெ.தேவதாஸ் 2. வசந்தா க.பெ. மோசஸ் 3. ரவி த.பெ. ஜெயபால் 4. ஸ்டாலின் (வயது – 1.1/2) த.பெ. ஹெர்சோம் 5. ஹெத்சியா கிருபா க.பெ.ரவி கோயில் பிச்சை ஆகியோர் கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்

மேற்படி நபர்களை கிணற்றிலிருந்து மீட்கும் பணியில் தீவிரமாக தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்

Related Post