Tue. Jul 1st, 2025

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதில்  குளறுபடி – பொதுமக்கள் ஏமாற்றம்


ரேஷன் கடைகள் முலம் மக்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை, சோப்பு, டீதூள் போன்ற பொருட்கள் மாதந்தோறும் பொதுமக்கள் பயனடையும் வகையில் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பதாக நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், அதிலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள்.  அதன்படி அனைவரும் கைரேகையை பதிவு செய்தார்கள்.

இந்த மாதத்தில் இருந்து புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுக்குறித்து ரேஷன் கடை விற்பனை யாளர் தெரிவிப்பது என்னவெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் அதாவது அரிசி வாங்கும் போது கை ரேகை, சீனி வாங்கும் போது கை ரகை வைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

பொதுவாகவே பொதுமக்கள் அநேகருக்கு கைரேகை விழுவதில்லை. இதனால் பல கடைகளில் விற்பனையாளருக்கும் பொது மக்களுக்கும் சண்டை நடந்து கொண்டு வந்தன.

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு நபருக்கு 25 நிமிடம் வரை வரை ஆகின்றன.

பொதுவாக பொருட்கள் வாங்குபவர்கள் முதல் இரண்டு வாரங்களில் வாங்குவதற்கு வருவார்கள். சில கடைகளில் ஆயிரம் கார்டு உள்ளன. இப்போது இந்த உத்தரவு மக்களுக்கு மிகவும் வேதனையை தருகின்றன.

மேலும் கைரேகை மெஷினுக்கும் எடை மெஷினுக்கும் ப்ளூடூத் மூலம் கனெக்ஷன் கொடுத்துள்ளார்கள். எடை சரியில்லை என்றால் பொருள் போட முடியாது.

இது நல்ல திட்டம் என்றாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது

இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆக வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இன்று கூட இங்குள்ள கடைகளில் இணையதளம் வேலை செய்யவில்லை என்று பொருள்கள் வழங்க பதிவு செய்ய முடியாமல், பொருள்களை வழங்காமல் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்னர்.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்னர்.

எனவே அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை மறுஆய்வு செய்து மக்கள் எளிதில் பொருட்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655

Related Post