Tue. Jul 1st, 2025

நாசரேத் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து

நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் செந்தில் ஸ்வீட்ஸ் கடையும், முத்தூட் பின்கார்ப் நிறுவனமும் இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை உள்ளே இருந்து கரும்புகை வந்ததால் பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்

ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறை அதிகாரி ஜான்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை அணைத்தனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655

Related Post