சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்துள்ளனர்.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைகோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்ப முறையில் செய்துள்ளனர்.
மூன்றாவது மாநில அளவிலான சிம்போசியம் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் நீதிஅரசர் ஜான் ஆர்.டி. சந்தோஷம் வழிகாட்டுதலின் பேரில் மற்றும் துணை பொறுப்பாளர் டாக்டர் ராமா தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் மிக அருமையாக வடிவமைத்துள்ளனர்
புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய இறுதியாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் தினேஷ், கோகுல், முத்து செல்வம், ஏஞ்சல், விக்னேஷ், விக்ரம், சரவணகுமார், ஹரி, பிரபாகரன்,பொண்ணு தங்கம், சாதனை படைத்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் சுங்கத்துறை உதவி ஆணையர் திரு அழகேசன் மற்றும் பிளாக் ஸ்டோன் ஷிப்பிங் இயக்குனர் அலெக்ஸ் செல்வின் ராஜ்குமார் கலந்து கொண்டு மாணவர்களைக்கு வாழ்த்துரை கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் கட்டிட பொறியாளர் தீபக்ராஜ், கல்லூரி துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி, செல்வரதி, டயலா, ஆனந்தி, டேவிட் ராஜா, இயந்திரவியல் துறை துணை பேராசிரியர்கள், அலெக்ஸ்ராஜ், கனகராஜ், பிரைட்டன், எபநேசர், எட்வர்ட், மனுவேல் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் செய்திருந்தார்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655