தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் டாஸ்மாக் கடையில் தேர்க்கன்குளத்தை சேர்ந்த உத்திரம் என்பவரின் மகன் இசக்கி (32) என்பவர் மது வாங்கி அருந்தியுள்ளார்
மது அருந்திய சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிறு வலி அதிகமாக இருந்த காரணத்தினால் உடனடியாக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்
மேற்படி இசக்கி வாங்கி குடித்த மதுவானது காலாவதியானது என்றும், அதனால்தான் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டு உள்ளது என்றும் அங்கிருந்த மது பிரியர்கள் தெரிவித்துள்ளனர்
தற்போது பேய்குளம் டாஸ்மார்க் கடையில் காவல்துறையினர் கெட்டுப்போன மது பாட்டில்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்
இது அப்பகுதி மது பிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது