நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாசரேத் திருமறையூர் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் முதியோர்இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இரஞ்சன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் மத்தேயு ஜெபசிங், ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி. அரிகரன், பொதுக்குழு உறுப்பினர் மோகன்சிங், ஆழ்வை ஒன்றியத் துணைச் செயலர் மாசில்லாமணி, தொண்டர் படை கணேசன், வகுத்தை முத்துகிருஷ்ணன், சென்னை தொழில் அதிபர் தர்மராஜ் இஸ்ரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் முதியோர் இல்ல பொறுப்பாளர் வனமோகன்ராஜன் நன்றி கூறினார்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655