நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் மதுரை சரகத்திற்கு மாறுதலாகி செல்வதையொட்டி அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிதம்பர மூர்த்தி, டேவிட் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பாஜக செயலாளர் கனல் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் ஆகியோர் பேசினர்.
இதையடுத்து அவரை பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர்.
இதில் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, ஐஜினஸ்குமார், வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், செல்வின் துரை மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை காவலர் வேல்பாண்டியன் நன்றி கூறினார்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655