நாசரேத் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஜெபதாஸ் ராஜேந்திரன் (54). இவர் தபால் நிலைய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ம்தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஜெபதாஸ் ராஜேந்திரன் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிய மர்மநபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நாசரேத் காவல் ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வெள்ளமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நாசரேத் அருகே உள்ள அரசாங்கநகரைச் சேர்ந்த முண்டன் மகன் சண்முகம் (37) என்பதும், ராஜேந்திரன் வீட்டில் வாகனத்தை திருடியவர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை மீட்டனர்
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445656