Wed. Jul 2nd, 2025

நாசரேத்- திருமறையூரில் மர்காஷிஸ் நூல் வெளியீட்டு விழா

நாசரேத்தில் திருமறையூர் திருச்சபையினர், கிறிஸ்தவ வரலாற்று சங்கத்துடன் இணைந்து “மகோன்னத மிஷனரி மர்காஷிஸ்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நாசரேத்தின் தந்தை என்று போற்றப்படும் கனம் ஆர்தர் மர்காஷிஸ் அவர்களின் 117-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, முனைவர்  கிறிஸ்துதாஸ் அவர்கள் எழுதிய மற்றும் மறு பதிப்பு செய்யப்பட்ட “மகோன்னத மிஷனரி மர்காஷிஸ்” நூல் வெளியீட்டு விழா மற்றும் நாசரேத் வரலாற்று கருத்தரங்கு திருமறையூர் மறுரூப சிற்றாலயத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு ஆரம்பமாக திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் ஜெபம் செய்து அறிமுக உரையாற்றினார்..

தொடர்ந்து கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க செயலாளர் மன்னா செல்வகுமார் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடிகே ஜெயசீலன் எம்.பி. முதல் பிரதியை வெளியிட முன்னாள் வங்கி மேலாளர் ஜெயபால் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை நாசரேத் ரஞ்சன் வெளியிட வேதராஜ் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை குருவானவர் பொன்னுசாமி பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ரஞ்சன் வேதராஜ் வரலாற்றுரை ஆற்றினார். முனைவர் டி. ஏ. கிறிஸ்துதாஸ் எழுதிய “மகோன்னத மிஷனரி மர்காஷிஸ்” நூலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஜான்சேகர், லேவி அசோக் சுந்தர்ராஜ், ஆண்ட்ரூஸ், உலகராஜ், மற்றும் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிறைவாக திருமறையூர் சேகர தலைவர் ஜாண் சாமுவேல் நன்றியுரை ஆற்றி, இறையாசி வழங்கினார்.

த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55

Related Post