கடையம் அருகே மனைவியுடன் பழகிய உடன் வேலை பார்த்த தொழிலாளியை தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை.
வி.கே.புதூர் அருகே உள்ள தாயார்தோப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (26). கட்ட்ட்த் தொழிலாளியான ஆமோஸிற்கு சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்த நந்தினி (23) என்பவருடன் திருமணம் ஆகி மற்றும் ஹன்சிகா (2) என்ற மகள் உள்ளனர்.

இவர்கள் தற்போது கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளையில் வசித்து வந்தனர். ஆமோஸிடம் செல்போன் இல்லாததால் அவனுடன் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் நந்தினி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆமோஸுடன் வேலை பார்த்த முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் மகன் அந்தோணி டேனிஸ் என்ற டேனி (35) அடிக்கடி செல்போனில் பேசியதில் நந்தினிக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளது. அதே வேளை ஆமோஸும் தொடர்ந்து மது அருந்தி மதுவிற்கு அடிமையானதையடுத்து நந்தினியும் அந்த அந்தோணி டேனிஸும் சேர்ந்து வாழத் திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி சனிக்கிழமை நந்தினியை அழைத்துச் செல்ல அந்தோணி டேனிஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக ஆமோஸூம் வந்ததால் தனியாக போவதையறிந்து தடுத்துள்ளார். அப்போது ஏற்பட்டத் தகராறில் அந்தோணி டேனிஸ், ஆமோஸை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியுள்ளார். கணவரை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி தடுக்காமல் இருந்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீஸார் ஆமோஸ் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நந்தினி மற்றும் அந்தோணி டேனிஸ் இருவரிடமும் கடையம் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.