நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி அவர்கள் தலைமை தாங்கினார். நூலகர் பொன்.இராதா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கொம்பையா அனைவரையும் வரவேற்றார்.
வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி என்ற தலைப்பில் புலவர் கணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன், தொழிற்சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ், மருத்துவர் விஜய் ஆனந்த், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரவி செல்வகுமார், ஆசிரியர் செல்வின், உதவிப் பேராசிரியர் சிவா, சுதா ஜெயந்தி,மனோகரன் , அந்தோனிராஜ் பிரபாகரன்,ரத்னசிங், ஜான் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

