தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் துறை அசோசியேஷன் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் துறை பாடகர் குழுவினரின் இறை வணக்கப் பாடலுடன் துவங்கியது. பேராசிரியர் கிம்காம் ஆரம்ப ஜெபம் செய்தார். பேராசிரியர் மதன் வேதபாடம் வாசித்தார். துறைத்தலைவர் சிவமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமையுரை நிகழ்த்தினார். பருவ தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உதவி பொரியளர்களாக பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் எடின்பரோ மற்றும் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கடின உழைப்பு மற்றும் நல் ஒழுக்கம் பற்றிய சிறப்புரை ஆற்றினர்.
தொடர்ந்து துறை மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை முத்து ராம சுந்தரி நிறைவு ஜெபம் செய்தார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் மற்றும் கணனி துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
9487445655

