நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பிள்ளையன்மனையின் 58வது கல்லூரி நாள் விழா கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற்றது.
விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வராஜ் ஐசக் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழு இறை வணக்கப் பாடலை பாடினார்கள். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் பிரமிளா அன்பரசி வேதபாடம் வாசித்தார். துமிழ்த்துறை தலைவர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி ஆண்டு அறிக்கையை வாசித்தார். கல்லூரிச் செயலர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் தலைமையுரையாற்றினார்.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர் ஏ.டி.கே. ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் பயன் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
பாடங்களில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கப்பட்டது..
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் இளங்கலை கணிதவியல் பாடப்பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த ரேச்சல் ஆக்னஸ் மற்றும் இளங்கலை வேதியியல் பாடப்பிரிவில்; பன்னிரெண்டாவது இடம் பிடித்த கிரேஸ் ஆகியோருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
நடனம் குழுப்பாடல் மற்றும் நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மாணவரால் நடத்தப்பட்டது.
வரலாற்று துறை தலைவர் தாமஸ் நன்றி கூறினார். கணிதத் துறை தலைவர் அலிஸ் பாப்பா நிறைவு ஜெபம் செய்தார்.
விழாவில் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி. பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55