தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது

சுமார் முப்பது நிமிடங்கள் பெய்த மழையில் பால்ராஜ் என்பவருது வீட்டின் மேல் கூரை காற்றில் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்தது

இதே போல் அவரது வயலில் பருத்திப் பயிர்கள் நல்ல நிலமையில் இருந்த நிலையில் காற்றில் செடிகள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. இதனால் விவசாயி பால்ராஜ் அவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது

சேதமடைந்த வீட்டிற்கும் பயிர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

இதேபோல் காற்றில் மரம் சாய்ந்து மின் வயர் அறுந்து மின் தடை ஏற்பட்டுள்ளது

