நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணி புரியும் விக்ராந்த் என்பவரின் தாயார் வசந்தா (70) சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் நேற்று இரவு தனியாக இருந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, சங்கச் சங்கிலி திருடப்பட்டு இருந்தது
.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா என்று விசாரித்து வந்தனர்
காவல்துறையின் விசாரணையில் பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்த ஈசாக்கு என்பவரின் மனைவி செல்வரதி (22) என்பவர் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் மீரான்குளம் சென்று செல்வரதியை கைது செய்தனர்
கொலை செய்யப்பட்டவரின் வீடு அருகே செல்வரதியின் தாயார் வீடு உள்ளதும், செல்வரதியின் மீது சிறுவனை கொன்ற கொலை வழக்கும், திருட்டு வழக்கும் ஏற்கனவே உள்ளது
செல்வரதிக்கு இரண்டு மாத கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கொலை நகைக்காக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் உள்நோக்கத்தோடு நடைபெற்று இருக்குமா என்றும்? கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு இருப்பார்களா என்றும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்