வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாயை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி வசந்தா (70) இன்று இரவு அவர் வீட்டில் தனியாக இருந்த நேரம் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர். அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கச் செயின் திருடப்பட்டுள்ளது.

மூதாட்டி வசந்தாவின் மகன் விக்ராந்த் நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். விக்ராந்த் ஆனந்தபுரத்தில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சொந்த கிராமத்தில் தாயார் மட்டும் வசித்து வந்ததனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு எதுவும் காரணங்கள் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

கொலை நடைபெற்ற இடத்தில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார் அவர்கள் நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார்
காவலரின் தாயார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.