காயல்பட்டிணம்
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது .
அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்த போது சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி சந்தித்தார். தமிழக மக்களின் மனநிலை நன்கு அறிந்த ஜெயலலிதா இனிவரும் காலங்களில் ஒரு போதும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியான வாக்குறுதியை கொடுத்தார் .
ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தன் விளைவாக மாபெரும் வெற்றி பெற்று அன்றே தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தார். மேலும் தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கடைசி வரையிலும் காப்பாற்றியவர் ஜெயலலிதா.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தனது சுயலாபத்திற்க்காக பாஜகவுடன் கூட்டணி வைத்ததின் விளைவாக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைக்க போகிறதா ஒரு போதும் இல்லை. ஏனென்றால் பாஜகவுடன் கூட்டணி வைத்த கருணாநிதி மற்றும் – ஜெயலலிதா ஆளுமையான தலைவர்கள்லையே தமிழகத்தில் ஆட்சியை அமைக்க முடியவில்லை அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.
மேலும் 2026 ல் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்ட மன்ற தேர்தலில் அதிமுக வரலாறு கானாத தோல்வியை சந்திக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
மேலும் அதிமுகவை நம்பி வாக்களித்த இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை இதனை இஸ்லாமியர்கள் மறக்க மாட்டார்கள். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்ட மன்ற தேர்தலில் பாஜகவால் படுதோல்வியை சந்தித்தேன். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவை விட்டு விலகுவேன் என்று பேசினார்.
மீண்டும் அதிமுக – பாஜகவுடன் கூட்டனி என்று தெரிந்தவுடன் அதிமுகவை விட்டு ஜெயக்குமார் விலகியதாக தவகல் வெளியாகி உள்ளன.
அதேபோல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று கூறிய அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்
மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் இரு கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களும், தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளதால் சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ள இக்கூட்டணி வெற்றி பெற வாய்ப்பில்லை என காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
