சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலதாமத பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான சிறப்பு முகாம் இஸ்ரோ நில எடுப்பு தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) ஷீலா அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

மேற்படி முகாமில் சுமார் 30 மனுதாரர்கள் கலந்து கொண்டனர் அதில் 10 மனுதாரருக்கு உடனடியாக மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு உடனடியாக இறப்பு சான்று வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மனுதாரர்கள் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

மேற்படி சிறப்பு மகாமில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி மற்றும் சாத்தான்குளம் வட்டத்திற்கு உட்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.
