Tue. Jul 1st, 2025

பேய்க்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பநேரியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் செல்வகுமார்.

இவர் மல்லலில் உள்ள தனது வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று மாலை சென்றுள்ளார். வயலில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின் வயர் அறுந்து கிடந்துள்ளது.

அறுந்து கிடந்த மின் வயரை தெரியாமல் மேற்படி செல்வகுமார் மிதித்ததனால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானார்

சம்பவம் குறித்து அறிந்த சேரகுளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு உண்டாக்கி உள்ளது

Related Post