தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் காவல் நிலையத்தின் எதிரே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் கிடந்த பிணத்தை மீட்டனர்.

போலீசார் விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து (60) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை என்றும், காவல் நிலையம் அருகே கிணற்றில் இறந்து கிடந்தவர் அவராக இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
இதை அடுத்து அவரது குடும்பத்தினரை அழைத்து விசாரித்து வருகின்றனர்