நாசரேத் அருகே நாலுமாவடியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பெர்பியா பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
நாசரேத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டேபிளி தெருவில் வசித்து வரும் ஜேம்ஸ் இவர் பேரூராட்சி கவுன்சிலர். இவரது மகள் பெர்சியா நாலுமாவடியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆசிரியை கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயற்சி செய்தான். உடனே அந்த ஆசிரியை அவனிடம் போராடினார். ஆசிரியை சத்தம் போடவே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து பைக்கில் வந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்று விட்டான்.
இதுகுறித்து அந்த ஆசிரியை நாசரேத் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த நாசரேத் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமரா எடுத்த வீடியோவையும் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த சம்பவம் நாசரேத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மாலை நாசரேத் பகுதிகளில் நாசரேத் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தலைமையில் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஐசக் மகாராஜா மற்றும் காவலர் ஜெகநாதன் போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பைக்கை ஓட்டி வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவர் சம்பவத்தன்று கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த நபர் தனது பெயர் அசோக் த/பெ ராஜபால் வயது 37 ஸ்ரீவைகுண்டம் தாலுகா அடைக்கலாபுரத்தில் அணியாபரநல்லூர் வேத கோயில் தெருவில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். மேலும் அவர் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.விசாரனையும் நடத்தி வருகிறார்
த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55