தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கு இடையே ஆன புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி யில் உள்ள ஒன்பதாவது வகுப்பு மாணவர், டேவிட் சாலமோன் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று தனது கண்டுபிடிப்பிற்காக முதல் பரிசு பெற்றுள்ளார்.
மாணவர் டேவிட் சாலமோன், பூமியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை, முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார்.
மாணவர் டேவிட் சாலமோனின் கண்டுபிடிப்பு அகில இந்திய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது.
அகில இந்திய அளவில் முதல் பரிசு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவன் டேவிட் சாலமோனை நெல்லை சரக காவல்துறை டிஐஜி முனைவர் பா. மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் கேடயம் மற்றும் மரக்கன்று வழங்கி பாராட்டினார்.
மாணவனுடைய கண்டுபிடிப்பு குறித்து முழுமையாக கேட்டறிந்து மாணவன் டேவிட் சாலமோன் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் வரம் அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் நாகராஜ், தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி அலுவலர் அருள்ராஜ், தமிழ்நாடு என்சிசி ஐந்தாவது பட்டாலியனை சேர்ந்த சுபேதார் பாண்டி, மற்றும் சமூக ஆர்வலர்கள் கோபாலகிருஷ்ணன், சதீஷ்குமார், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.