Tue. Aug 26th, 2025

உடன்குடி அருகே சமூக ஆர்வலர் விபத்தில் பலி

உடன்குடியை சேர்ந்தவர் அசோக் சுப்பையா (42). இவர் பனைமரம் வளர்ப்பு,  நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனு கொடுத்து வந்தார். மக்கள் பிரச்சினைகளில் மனு கொடுத்து தீர்வு காண்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்

இன்று மதியம் இருசக்கர வாகனத்தில்  குலசேகரப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது முத்துநகர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த சமூக ஆர்வலர் அசோக் சுப்பையாவை அங்கிருந்தவர்கள் மீட்டு  திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததார்

Related Post