சாத்தான்குளம் வட்டம் பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பனேரி ஊரைச் சேர்ந்த லிங்கதுரை (வயது – 42) என்பவருக்கு 4 மகன் 1 மகள் உள்ளனர்.
அவரது மகள் பொன்னாத்தாள் (வயது 17) என்பவர் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் வளர்க்கும் மாட்டினை வசவப்பநேரி பெரிய குளத்தில் குளிப்பாட்ட சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக குளத்து நீரில் மூழ்கி விட்டார்
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் வாகனம் மூலம் ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பொன்னாத்தாள் இறந்துவிட்டார்
மேற்கண்ட நபரின் உடல் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.