நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் – ஆசிரியர் கூடுகை நடைபெற்றது.
கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமையுரை ஆற்றினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் செல்வராஜ் ஐசக் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கினார்.
கல்லூரியின் செயல்பாடுகள் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை பொருளியல் துறைத்தலைவரும் நிதியாளருமான பேராசிரியர் சுரேஷ் ஆபிரகாம் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறினார்.
நூலகப் பயன்பாட்டின் அவசியத்தைப் பற்றி கல்லூரி நூலகர் முனைவர் ஜாய் சோபினி விளக்கினார். உடற்கல்வி இயக்குநர் முனைவர் ராஜாசிங் ரோக்லண்ட் விளையாட்டின் சிறப்பையும் அரசு வேலை வாய்ப்பில் அளிக்கப்படும் முன்னுரிமையினையும் பற்றி பேசினார்
இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் கிரேஸ்லின் ஜூலியானா நிறைவு ஜெபம் செய்தார். இதில் 700 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் தாமஸ் நன்றி கூறினார்
ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் வழக்கறிஞர் ரவிந்திரன் சார்லஸ் ஆலோசனையின்படி கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
த. ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
9487445655