Sun. Jan 18th, 2026

நாசரேத் புதிய காவல் ஆய்வாளர்  பதவியேற்பு

நாசரேத் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக கங்கை நாதபாண்டியன் பதவியேற்றார். 

நாசரேத் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக  பணியாற்றிய ஜீன் குமார் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக கன்னியாகுமரி அரண்மனை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய  கங்கை நாதபாண்டியன்  நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். 

புதிய  ஆய்வாளரைஉதவி காவல் ஆய்வாளர் வைகுண்டதாஸ் மற்றும்  போலீசார்  வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.  

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
9487445655

Related Post