தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் விஜயமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்புடன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், மாநில தலைவர் திருமலைவாசன், மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில பொருளாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சங்கத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, மாவட்ட தலைவராக குமாரலிங்கம், மாவட்ட செயலாளராக கார்த்திக், மாவட்ட பொருளாளராக மாலதி, மாநில துணைத் தலைவர்களாக சற்குணம், கணேசமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர்களாக கதிர்வேல், காட்வின், மாநில செயற்குழு உறுப்பினர்களாக முருகராஜ், மாரியப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதிமொழி ஏற்றனர். இதில், மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில், மாவட்ட தலைவர் குமாரலிங்கம் நன்றி கூறினார்.