Tue. Apr 29th, 2025

சாத்தான்குளம் அருகே  கல்லூரி மாணவர் தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள  நடுவக்குறிச்சி கிராமம் அடப்பு விளை ஊரைச் சேர்ந்த வைகுண்டம் என்பவர் மகன் பாலகிருஷ்ணன் வயது 19. இவர் கொம்மடிக்கோட்டை காஞ்சி ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரியில் படித்து வருகிறார்

இன்று 22/02/2025 மாலையில் வீட்டில் தனியாக இருந்த பாலகிருஷ்ணன் பூச்சி மருந்து அருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

பாலகிருஷ்ணனின் சகோதரி ஸ்ரீதேவி என்பவர் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது சகோதரன் நிலை கண்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனம் மூலம் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்ததன் பேரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலகிருஷ்ணன்  இறந்துவிட்டார். ன்

மேற்படி இறந்து போன பாலகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தட்டார்மடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Post