நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையை உயர்ந்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை-திருச்செந் தூர் இடையேயுள்ள ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணிகள் இன்று 17ம் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் தொடங்கி நடைபெறுவதாக தென்னக ரயில்வேயின் பொறியாளர் பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நெல்லை திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களான பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தற்போதுள்ள தாழ்மட்ட நடைமேடை எண் 1 ஐ உயர்மட்ட நடைமேடையாக உயர்த்தவும், செய்துங்கநல்லூர் நிலையத்தில் நடைமேடை எண் 1 மற்றும் 2ஐ உயர்த்தும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.
அதுபோல நெல்லை- திருச்செந்தூர் இடையே உள்ள முக்கிய நகரமான நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையும் உயரம் மற்றும் நீளம் குறைவாக உள்ளது.
மேலும் நாசரேத் ரயில் நிலையத்தில் சில நேரங்களில் ரயில்கள் சந்திப்பு ஏற்படுவதால் 2வது நடை மேடையில் ரயில் வந்து செல்கிறது.
இந்த நடைமேடை தாழ்வாக அமைந்துள்ளதால் வயதானோர் ரயிலில் ஏற, இறங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள், விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத் ரயில் நிலையத்தின் 2வது நடைமேடையையும் உயர்த்த வேண்டும் என நாசரேத் பகுதி மக்கள் மற்றும் ரயில் பயணிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55