Tue. Apr 29th, 2025

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பிப்ரவரி 20 இல் நடக்கிறது

விவசாயிகளின் குறைகளை தீர்க்கவும், நலத் திட்டங்களை தெரிவிக்கவும் மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான “விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இந்த பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2025 அன்று காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post