தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நாசரேத் வழியாக பேய்க்குளம் சாலைப்புதூருக்கு உடையார்குளம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு, அம்பலச்சேரி, கட்டாரிமங்கலம் போன்ற கிராமப்புற ஊர்கள் வழியாக தனியார் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்து இயக்கப்பட்ட வழித்தடத்தில் அதிக பேருந்துகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
மேற்படி பேருந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் இயக்கப்பட்டு வந்ததனால் பொதுமக்களும் மாணவ மாணவியர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்
இந்நிலையில் மேற்படிப்பு இருந்தாலும் ஒரு மாதத்திற்கு மேலாக இயக்கப்படவில்லை என்று தெரிகிறது
இப்பேருந்து இயங்காத காரணத்தினால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும், உடனடியாக இப்பேருந்தை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகமும், வட்டாரப் போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
